Ads Area

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிசாத் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும்.

Nowshad Afaf 

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிசாத் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும். 

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் அரசியல் வாதிகளும் மக்களும் றாஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து நல்லாட்சி யின் பொது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மகிழ்ச்சி அடைந்தோம். காரணம் றாஜபக்ஷ அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு சில இனவாத போக்குள்ளவர்களால் முஸ்லீம் பள்ளிவாசல், அழுத்கமை மற்றும் முஸ்லீம்களின் பொருளாதாரம் போன்றவற்றை இலக்கு வைத்து பல தாக்குதலை நடத்திய நிலையில் அவர்களை றாஜபக்ஷ அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை தண்டிக்க வில்லை என்பதுவேயாகும்.

அன்று றாஜபக்ஷ அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்புத் தேடியே, நல்லாட்சி பிரதமர் றணிலுக்கு வாக்களித்தோம். ஆனால் இந்த நல்லாட்சியில் முஸ்லீம் சமூகம் எதிர்பார்த்த எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை. மாறாக றாஜபக்ஷ அரசாங்கத்தில் இனவாத கும்பல் முஸ்லீம்களுக்கு எதிராக என்ன கோசங்களை முன்வைத்ததோ அவை அத்தனையும் இந்த நல்லாட்சியில்தான் அவர்களுக்கு மிகச் சரியாக நிறைவேறி வருகிறது என்பது நிதர்சனமானது. றாஜபக்ஷ அரசாங்கத்தில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது, ஹலால் பிரச்சினை வந்தது, மாடறுப்பு பிரச்சினை வந்தது அளுத்கம தாக்குதல் 2 நாள் மட்டுமே அதற்குள் நிலவரம் சீராக்கப்பட்டது.

அதேவேளை அவர்களின் ஆட்சியில் யுத்தம் முடிவடைந்தது, நாட்டில் வீதி அபிவிருத்தி வீறுநடை போட்டது, இளைஞர்கள் தொழில்வாய்ப்பு நிறைவேற்றப்பட்டது இவ்வாறு நாடு தழுவிய சந்தோசம் ஆட்சியில் மிதந்தது. இதில் எமது அனைத்து தலைவர்களும் மிதந்தனர்.

அதேபோல இந்த நல்லாட்சியில் முஸ்லீம் சமூகம் சந்திக்கும் அவலங்கள் ஒரு நிரந்தர சமூக அழிப்புக்கான தொடராகவே இடம்பெறுகிறது. காரணம் எந்த ஒரு இனவாத செயற்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி இல்லை.

இனவாதிகள் அம்பாரையை குறி வைத்து பள்ளியை உடைத்தனர் இதுவரை எந்த தீர்வும் இல்லை அந்த நிகழ்வையும் எமது சமூகம் றாஜபக்ஷ அணியினரே செய்வதாக நம்புகிறது, ஆனால் பாதுகாக்க வந்த நல்லாட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, இதுவரை தீர்வு இல்லை

கண்டி மக்களை இனவாத கும்பல் தாக்குகிறது, சட்டம் ஒழுங்கு அமைச்சை பிரதமர் றணில் கையில் வைத்துக் கொண்டு 7 நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்துல் றஊப் ஹக்கீமும் றிஷாட் பதியுதீனும் சுற்றி சுற்றி மக்களை பார்த்து அலைகிறார்கள், பிரதமரும் சட்ட ஒழுங்கு அமைச்சருமான றணில் ஒலுவில் வந்து படம் காட்டிவிட்டு அம்பாரை பள்ளியையாவது பார்த்துச் செல்ல அவருக்கு மனமில்லை அவரைக் கூட்டிக் கொண்டு வந்த அப்துல் றஊப் ஹக்கீமுக்கும் அது பெரிதாக தென்படவுமில்லை. அம்பாரை முதல் அக்குறணை வரை இதுவரை எந்த தீர்வும் இல்லை.

எந்த நிலையில் முஸ்லீம் சமூகம் தாக்கப்பட்டாலும் எமது முஸ்லீம் கட்சி தலைவர்கள், நாங்கள் இது சம்பந்தமாக ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பேசியிருக்கிறோம். என்ற கதையோடு முடித்துக் கொண்டனர்.

இவ்வாறான சூழ்நிலையில் சம்மந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான கூட்டணி நல்லாட்சி அரசை தலையில் தூக்கி வைத்து ஆடுவது போன்ற குள்ள நரித் தந்திரத்தோடு அந்த சமூகத்திற்கு இருக்கும் எதிர் பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள தாங்களே நல்லாட்சி அரசை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்று கூறி, பா.உ. சுமந்தின் தலைமையில் ஒரு புதிய யாப்பு நகல் ஒன்றை தயாரித்தது. அதனை பாராளுமன்ற பெரும்பான்மையோடு வெற்றி பெற வைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய எத்தணித்தது.

ஆனால் இந்த யாப்பு முழு நாட்டிற்கும் சிறுபான்மையாக இருக்கும் எமது முஸ்லீம் சமூகத்திற்கும் நஞ்சு என தெரிந்தே பாறாளுமன்றில் முஸ்லிம்கள் அதிகம் அதனை எதிர்த்தனர்.  மேலும், சிறுபான்மையினருக்கு சாதகமான ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது அவர்களின் பிரதான நோக்காகவும் இருக்கும் நிலையில்.

எமது முஸ்லீம் தலைமைகள் அதிர்வு மற்றும் வெளிச்சம் நிகழ்ச்சிகளில் ஊழையிட்டுத் திரிந்தனர். மட்டுமன்றி 18 மற்றும் 19 திருத்தச் சட்டங்கள் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது என மிகத் தெளிவாக தெரிந்தும், வாக்கெடுப்பில் சந்தோசமாக வாக்களித்துவிட்டு வெளியில் வந்து அவர் வாக்களித்து விட்டார் என்பதற்காக நாங்களும் வாக்களித்தோம் என முஸ்லீம் சமூகத்தை கபளீகரம் செய்தனர். அமைச்சர் பதவிகளை தூக்கி வீசுவோம் என வீராப்பு பேசினாலும், அவற்றை எந்தக் காரணத்திற்காகவும் இதுவரை அவர்கள் இழக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

நாட்டிற்கு எதிரான ஒரு யாப்பு கொண்டு வரப்பட இருந்த நிலையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நோக்கில் ஏற்படுத்தியதே கடந்த ஆட்சி மாற்றம் எனலாம். இந்த ஆட்சிமாற்றம் ஏற்படுவது நாட்டின் இறைமையின் பாதுகாப்பிற்கு தேவை என்றாலும், வீசேடமாக அது முஸ்லீம் சமூகத்திற்கு தேவையான ஒரு விடயம். இவ்வாறிருக்க இந்த ஆட்சிமாற்றத்தில் அப்துல் றஊப் ஹக்கீமும், றிஷாட் பதியுதீனும் ஏன் ஒத்துழைக்கவில்லை ?

அதற்கான சரியான காரணம் என்ன?

நல்லாட்சியில் முஸ்லீம் கட்சிகளின் 12 ஆஷணங்கள் இல்லை என்றால் நிச்சயமாக ஆட்சி மாறிவிடும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் பேசுகிறது, உண்மையில் அவர்களுக்கு பேரம் பேசும் சந்தர்ப்பம் முஸ்லீம் கட்சிகளின் முட்டுக் கொடுப்பாலயே ஏற்படுகிறது. இருந்தும் முஸ்லீம் கட்சிகள் ஏன் எமது சமூகத்தின் பாதுகாப்பை முன்வைத்து இரண்டு சாராரிடமும் பேரம் பேசவில்லை???? பேரம் பேசும் சந்தர்ப்பம் இருந்தும் ஏன் மக்காவுக்குச் சென்றனர்??

றணில் விக்ரம சிங்காவுக்கு அமேரிக்காவும், இஸ்ரேலும், நோர்வேயும் தேவைப்படலாம், ஆனால் எமது சுயநிர்ணயத்தோடு சுதந்திரமாக இந்த நாட்டில் நாம் வாழ வேண்டும். இதற்காகவே கட்சித் தலைவர்களை நாம் பாறாளுமன்றில் அமைச்சர்களாக அமர வைக்கிறோம். மாறாக, அரசாங்கத்திடம் நல்ல பெயர் வாங்கவோ, பொருளாதாரம் சேர்த்து குடும்பம் நடத்தவோ, காணி அபகரிக்கவோ, ஊழல்வாதிகள் என்று பெயர் வேண்டவோ அல்ல.

ஆக மொத்தத்தில் அன்று எமது சமூகத்திற்கு பாதுகாப்பு மட்டுமன்றி எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒய்யாரமாக இருந்ததன் விழைவே உங்களை நம்பி றாஜபக்ஷ அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்புத் தேடியும் அமைதியான வாழ்க்கையும் தேடியும் நல்லாட்சியிடம் சறணாகதியடைந்த 2,200,000 மக்களுக்கு படைத்த றப்பைத் தவிர எந்த தலைவனாலும் பாதுகாப்பில்லை.

கிட்டத்தட்ட 20 கிராமங்கள் 40 பள்ளிவாசல்கள் பல ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு உயிர்கள் இழப்பு, மக்கள் கற்பனை பண்ணமுடியாத காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மக்கள் பீதியால் றமழானில் நல்லமல்கள் செய்ய முடியாமல் அழுகையும் ஓலங்கழும். இந்த அப்துல் றஊப் ஹக்கீமும் றிஷாட் பதியுதீனும் அவர்களை பாதுகாப்பதா? சமூகத்தை பாதுகாப்பதா? என்ற பச்சோபத நிலையில்.

எனவே, சமூகம் பற்றி இந்த அரசியல் வாதிகள் சிந்தித்து இருந்தால், இன்று அவர்களோடு அழ்ழாஹ் இருந்திருப்பான். அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்திற்கும், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கும், அவரது விருப்பமற்ற பிரதமர் தெரிவுக்கும் எதிராக கோட்டுப்போட்டு நீதிமன்றம் ஏறியது சமூகத்திற்காகவா ? அல்லது அமைச்சுக்களுக்காகவா?

அன்று நீங்கள் செய்த சதியின் விளைவு இன்று இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இழந்து தவிக்கும் உயிர், உடைமைகள் மற்றும் பொருளாதாரம் என்பதே பொருத்தமானது.

முஸ்லிம்கள் இன்று இழந்திருந்திருக்கும் அத்தனைக்கும் அப்துல் றஊப் ஹக்கீமும், றிஷாட் பதியுதீனுமே பொறுப்புக் கூறவேண்டும். இந்த விடயத்தில் மக்களும் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டியது எமது சமூகத்தின் தார்மீகக் கடுமையாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe