Ads Area

கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த சாய்ந்தமருது மீனவர்கள் மீட்பு.

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த மீனவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருதிலிருந்து படகொன்றில் கடந்த 26 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற் போயிருந்தனர்.

இவர்கள் 27 ஆம் திகதி காலை கரை திரும்பியிருக்க வேண்டும் என்ற போதிலும், மீண்டும் கரைக்கு திரும்பாததால் மீனவர்கள் இணைந்து அவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

படகில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, பொத்துவில்லை அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை குறித்த மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe