வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் அதனை முசலி பிரதேச சபை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி முசலி பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.
முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியானால் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின் போதே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.