சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷ_ரா, நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா ஆகியனவற்றின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஊர் சார்பாக நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுக் கட்டளைத் தளபதி, பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி. எஸ்.எம்.எம். இஸ்மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும், சம்மாந்துறை முச் சபைகளின் தலைவர்கள் உட்பட சம்மாந்துறை அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.