மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலின் முன் பக்க வேலி பா.உ.மன்சூர் அவர்களின் உதவியினால் புணர்நிர்மானம்.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ எம் ஐ எம் மன்சூர் எம் பி அவர்களின் வேண்டுகோளின் நிமித்தம், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார சுதேசிய வைத்திய துறை இராஜாங்க அமைச்சருமான கெளரவ பைசால் காசிம் எம் பி அவர்கள் மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலின் முன் பக்க வேலியை அழகு படுத்துவதற்காக வேண்டி கம்பெறளிய திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அந்த வகையில் மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலில் ரூபாய். 0.5 மில்லியன் செலவில் ஆரம்ப கட்ட நிர்மானப் பனிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் எம் பி அவர்களுக்கும்,கெளரவ சுகாதார சுதேசிய வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களுக்கும் மஜீட்புர பிரதேச மக்கள் சார்பிலும், மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சார்பிலும் தெரிவிப்பதில் சந்தோசமடைகின்றேன்.
முகைதீன் வாவா முஹம்மட் அன்வர். JP.
முன்னாள் சம்மாந்துறை பிரதேசஉறுப்பினர்.
அமைப்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
மல்வத்தை வட்டாரம்.