சம்மாந்துறை அலிவன்னியார் வீதியில் அமைந்துள்ள சம்மாந்துறை கைர் பள்ளிவாசலின் விஸ்தரிப்புப் பணிகளின் பின்னர் இன்று முதலாவது கன்னி ஜும்மாத் தொழுகை இடம் பெற்றது.
சம்மாந்துறை கைர் பள்ளிவாசலில் தொழுகைக்கான இடப்பற்றாக்குறை நிலவி வந்ததனையடுத்து பள்ளிவாசலின் விஸ்தரிப்புப் பணியை மேற்கொள்ள தீர்மானித்து அதற்காக சம்மாந்துறை ஊர்மக்கள், தனவந்தர்கள், அரசியல்வாதிகள் என பலரிடமும் நன்கொடைகள் பெறப்பட்டு தற்போது பள்ளிவாசலின் விஸ்தரிப்புப் பணிகள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையில் இன்று அங்கு கன்னி ஜும்மாத் தொழுகை இடம் பெற்றது.
இன்றைய ஜும்மாத் தொழுகையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த புதன் கிழமை புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் கைர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் ஊடகவியலாளர் ஏ.ஜே.எம்.ஹனீபா- ஜே.பி தலைமையில் நடைபெற்றமையும் அதில் ஊர்ப் பிரமுகர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
தகவல் மற்றும் பட உதவி - ஏ.ஜே.எம்.ஹனீபா- ஜே.பி மற்றும் பரீஸ் ஸ்டுடியோ.