(எம்.எம்.ஜபீர்)
இலங்கையில் தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைவாக உலக வங்கியின் 25 மில்லியன் செலவில் ஒலுவில் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள ஆரம்ப வைத்திய பாரமரிப்பு நிலையத்தின் 02 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.சீ.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.