-எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில், மக்கள் வங்கியினால் பொருத்தப்பட்ட பணபரிமாற்று இயந்திரத்தின் செயற்பாட்டை, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் 2019.06.12 ஆம் திகதி பாவனைக்காக ஆரம்பித்து வைத்தார்.
பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, கலாநிதி யூ.எல்.செயினுடீன் அவர்கள் நீண்டகாலமாக எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக, பொருத்தப்பட குறித்த பணபரிமாற்று இயந்திரத்தினூடாக இங்கு கல்விகற்கும் சுமார் 700 மாணவர்களும், 100 ஊழியர்களும் நன்மையடையவுள்ள அதேவேளை குறித்த பிரதேச மக்களும் பாதசாரிகளும் நன்மையடைவர்.
நீண்ட இடைவேளையின் பின்னர், உபவேந்தர் நாஜீம் அவர்களது நேரடியான கண்காணிப்பின் கீழ், முடங்கியிருந்த கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் இறுக்கமான பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த 2019.06.10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேவைகளை இன்னும் இலகுபடுத்தும் செயற்பாடாகவே குறித்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.