(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக ஸ்தம்பிதமடைந்திருந்த கண் சத்திரசிகிச்சைகள் யாவும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கண் சத்திரசிகிச்சைக்கூடம் கடந்த 3 மாதங்களாக நவீனமயமாகப் புனரமைக்கப்பட்டுவந்ததே ஸ்தம்பிதநிலைக்கான காரணமாகும் என்றும் கூறினார். இனிமேல் கண்வில்லை பொருத்துதல் தொடக்கம் சகல கண்சத்திரசிக்சைகளும் கிரமமாக நடைபெறும்.
கண்வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் எஸ்.பிரேம் ஆனந்தின் வருகையின் பின்னர் சத்திரசிகிச்சைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. கண் நோயாளர்களின் வருகையும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
கண் வைத்திய நிபுணர் திருமதி ராதா தர்மரெட்ணம் (லண்டன்) அவர்களின் இந்த அன்பளிப்புப்பொதியை களுவாஞ்சிக்குடி சமூக நலன்புரி சங்கம் நேற்று வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனிடம் வழங்கிவைத்தது.