Ads Area

கல்முனையில் பிரதேச மட்ட பாதுகாப்புக் குழுக்கள் தெரிவு.

கல்முனை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட பாதுகாப்பு குழு அங்குரார்பண நிகழ்வு...!!!

உள்ளக,உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பணிப்புரையின் பேரில் நாட்டில் தற்போதைய சூழ்நிலை கருதி மக்களின் வாழ்க்கை (உயிர்)மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது சம்மந்தமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பாதுகாப்பு குழுக்களை அமைத்து அக்குழுக்களில் இருந்து பிரதேச மட்ட குழுவும் பிரதேச மட்ட குழுவில் இருந்து மாவட்ட மட்ட குழுவும் அதிலிருந்து தேசிய மட்ட குழு அமைப்பது சம்மந்தமாக அமைச்சின் சுற்றறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்த அடிப்படையில் இன்று (17) கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக பிரதேச மட்ட பாதுகாப்பு குழு கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர்,திருமதி பஸீரா றியாஸ் மற்றும் கல்முனை வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் பீ.ஜிஹானா ஆலீப் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுறை,சமூர்த்தி பிரதம தலைமை முகாமையாளர்.ஏ.எம் நஜீம்,நற்பிட்டிமுனை, மருதமுனை சமூர்த்தி வலய முகாமையாளர் சட்டத்தரணி என்.எம் முபீன் மற்றும் பள்ளிவாசல்களின் தலைவர்கள் செயலாளர்கள், அரச திணைக்களத்தின் பிரதிநிதிகள்,பாடசாலை அதிபர்கள்,சமூக மட்ட குழுக்களின் பிரதிநிதிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச மட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விபரம்

தலைவர்-அல்ஹாஜ் எம்.எம் நஸீர்(DS)
பிரதி தலைவர்- மெளலவி அல்ஹாஜ் ஏ.அபூஉவைதா
செயலாளர்-என்.எம் நெளஸாத்
பிரதி செயலாளர்- பீ.எம் நஸுருத்தீன்
பொருளாளர்-சீ.எம் ஹலீம்
இணைப்பாளர்- யூ எல் பதுருத்தீன்

உறுப்பினர்கள்

கே.இராஜதுறை(DDP)
ஏ.ஆர்.அமீர்(MMC)
ஏ.சி ஏ சத்தார்(MMC)
எம்.எஸ்.நிஸார்(MMC)
பஸீரா ரியாஸ்(MMC)
எல்.எம் சர்ஜுன்(DO)
பீ.எம் நவாஸ்
மெளலவி ஏ.எம் ஜப்ரான்
எம்.எஸ் பதுருத்தீன்
மெளலவி என்.ஜி.ஏ கமால் 
எம்.எம் ஹஸன்(CMA)
பீ.ஜிஹானா ஆரிப்(DDE)
பி டி ஜமால் 
மௌலவி எம்.டி மனாப்
எல் எம் ஜெஸ்மீர் 

இவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

Kalmunai Today.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe