Ads Area

பதவி விலகியவர்களில் மூன்று பேரைத் தவிர ஏனையோருக்கு பின்வரிசை ஆசனம்.

பதவி விலகியவர்களில் மூன்று பேரைத் தவிர ஏனையோருக்கு பின்வரிசை ஆசனம்.

பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு நாளை (18) பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனம் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு வழமை போன்று முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகிய உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர உள்ளனர். 

அதனடிப்படையில் ஏனைய உறுப்பினர்கள் அவர்களின் சிரேஷ்ட தன்மை அடிப்படையில் பின்வரிசையில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலையை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருந்தனர். அவர்களின் இராஜினாமா தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe