Ads Area

மாற்றுச் சுற்றறிக்கை விரைவில் வரும் அன்றேல் மாற்றுத் தீர்மானத்தை முஸ்லிம் காங்ரஸ் எடுக்க நேரிடும்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.


அரச அலுவலங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும், அங்கு சேவையினைப் பெற்றுக் கொள்ள வரும் பொதுமக்களுக்குமான ஆடை தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றினை பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடத்தில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

முஸ்லிம் காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூரும் இது விடையத்தில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகப் புத்தகத்தில் ஆடை தொடர்பான மாற்றுச் சுற்றறிக்கை விரைவில் வரும் அன்றேல் மாற்றுத் தீர்மானத்தை முஸ்லிம் காங்ரஸ் எடுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி வெளியான சுற்றறிக்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe