சம்மாந்துறை கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம்.
Makkal Nanban Ansar17.6.19
காரைதீவு சகா.
அம்பாறை - சம்மாந்துறை கோரக்கோயில் ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இடம்பெற்றுள்ளது. குறித்த உற்சவம் ஆலய தலைமை பூசகர் மு.ஜெகநாதன் ஐயா தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பக்தர்கள் அனைவரும் மஞ்சள் நீர் தலைக்கு வைத்து தீமிதிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த உற்சவத்தில் அம்மனின் அருளை பெற்று கொள்வதற்காக பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.