Ads Area

பா.உ.இஸ்மாயில் அவர்களுக்கும் சம்மாந்துறை முச் சபையினருக்குமிடையிலான சந்திப்பு.

பா.உ.இஸ்மாயில் அவர்களுக்கும் சம்மாந்துறை முச் சபையினருக்குமிடையிலான சந்திப்பு.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷுரா ஆகிய முச் சபைகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுடனான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, எமது நாடடிலுள்ள அனைத்து மதத்தவருடனும் ஒற்றுமை, பரஸ்பரத்தை மேலும் வலுச் சேர்க்க வேண்டும் என்பதுடன், பெரும்பான்மை சமூகத்தவருடன் எவ்வாறு பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயமும் பேசப்பட்டது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையில் எவ்வாறு மற்றய மதத்தவர்களுடன் ஒத்தாசையுடன் நடந்து கொள்ளல் எனும் விடயம் பேசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe