முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறியமை வரவேற்கத் தக்கது.
Makkal Nanban Ansar7.6.19
பௌத்த அடிப்படைவாதம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளில் இருந்து கூட்டாக வெளியேறிய முஸ்லீம் தலைமைகளின் அதிரடி நடவடிக்கையை ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.
எனினும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளில் இருந்து முஸ்லீம் சமூகம் நிரந்தரமாக பாதுகாக்கப்படவேண்டுமானால் உரிமைக்காக போராடிவரும் தமிழர் தரப்புடன் இணைந்து உரிமைகளை வென்றெடுக்க முஸ்லீம் சமூகமும், அரசியல் தலைமைகளும் முன்வர வேண்டும் என்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தில் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் முஸ்லீம் தலைமைகள் கூடடாக பதவி விலகிய விவகாரம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரான சுரேஷ் பிறேமச்சந்திரனிடம் ஐ.பீ.சீ தமிழ் அவரது நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.