உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தற்காலிக கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருந்த 35 மாடுகள் உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பசுமாடுகளுக்காக அதிகளவில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டது. தற்காலிக கொட்டகைகள் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மாடுகள் திறந்த வெளியிலேயே அடைக்கப்பட்டன.
மாடுகள் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால், உள்ளூர் கிராமவாசிகள் மின்னல் அடிக்கவே இல்லை என்று கூறுகின்றனர்.
35-க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளன, அதிகாரிகள் பொய் சொல்லி மூடி மறைக்கின்றனர், சமீப காலமாக கொட்டகையில் உணவு, தண்ணீர் என்று எதுவும் இல்லை; இதனாலே மாடுகள் இறந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாட்டுக்கொட்டகைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.