பொலிஸ் அறிவித்தல்.
சகல பொது மக்களின் நலன் கருதி சுகயீனமான வயோதிபர்கள், வைத்தியசாலைக்கு செல்வதற்கு வசதியில்லாத வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள், அத்தோடு திடீர் விபத்துக்கள், வாகன விபத்துக்கள் போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு சம்மாந்துறை பொலிஸாரினால் சகல நோய்களுக்குமான முதலுதவி வழங்கி, உடனுக்குடன் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக வேண்டி அம்புலன்ஸ் வண்டியொன்று பொலிஸ் நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு்ள்ளது.
மேலும் இத் தொலைத் தொடர்பு இலவசம் என்பதினால் பொலிஸார் அவதானத்துடன் இருப்பதினாலும் தவறான முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.
குறிப்பு - இவ் அறிவித்தலை சகலரும் தங்களது மதஸத்தள ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கவும்.
இப்படிக்கு
எம்.கே. இப்னு அஸார்.
பொறுப்பதிகாரி
பொலிஸ் நிலையம்
சம்மாந்துறை.