சரித்திரம் படைப்பதும், சாதனையால் மெச்சுவது என்பதும் சாதாரணமல்ல! மரத்தில் இடைவிட்ட கொப்புகளின் நடுவே மயிலொன்று நிற்பதென்றால் அது ஸ்தீரணமானது.
எம் முன்னனோர்களிடம் விதைக்கப்பட்ட காப்பியங்கள் அச்சொட்டாக இன்றும் அசையாத நிலையில் ஒரு கட்சிக்கு மாத்திரம் தீர்க்க தரிசணமாய் இருந்த வரலாற்று முகத்திரையை கிழித்து முழுச் சமூகத்தையும் விமோசனத்துக்கு கொண்டுவந்த கட்சியென்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான்.
தலைவரின் சில அகக் கண் பூத்த அரவணைப்புக்களால் பல இளைஞர்கள் இக் கட்சியின் பக்கம் காவுகொள்ளப்படுகின்றனர். இன்னொரு சிலர், மார்க்கத்தின் வீரியம் பேசி மார்க்கமே இல்லாமல் முஸ்லிம்களை முடக்க முனைகின்ற சில கட்சிகளின் விஷமங்களின் அதிருப்தியினால் சாரி சாரியாக வந்து குமிகின்றனர்.
இதற்கு சிறு உதாரணம் ஒன்றே கடந்த வருடம் (2018) இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தல்!...
வரலாற்றை புரட்டுகையில் சுவை தட்டி, இரசம் மிஞ்சினாலும் இவ் வரலாற்றுத் தடயங்களை காப்பாற்ற இன்னொரு அஷ்ரப் இருப்பாரா என மக்கள் மனதில் கொண்ட ஏக்கம் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வராலாற்றுப் பாரம்பரியத்தின் விம்பமாகக் காட்டியது.
இப்படி மக்கள் மத்தியில் சொல்லாலும், செயலாலும் புத்துயிர் கொண்ட இக் கட்சியின் வளர்ச்சி எண்ணிலடங்கா தடயம். உரம் போட்டு வளர்க்க இது மரமல்ல! உபதேசத்தினால் வளர்க்க இது மதமல்ல! மக்களுக்கான கட்சியென்பதை மக்கள் ஆனையினாலேயே வென்றெடுத்த மாபெரும் சின்னம் இந்த மயில்.
சாதாரணமாக முடியாத விடயத்தை சாதாரணமாக மக்கள் மனதில் இடம்பிடித்து இமயம் தொடுதல் என்பது அ.இ.ம.காவின் தேசியத் தலைவர், அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அகம்கவரும் கம்பீரமே!
இவ்வாறு பல கோணங்களிலும் சிந்திக்கையில் தன்னிகரற்ற வேகத்தில் பயணிக்க வல்லமைபூண்ட இக் கட்சி எதிர்வரும் தேர்களிலும் கம்பீரமான முறையில் நின்று சடுதியில் வென்றெடுக்க வேண்டிய பல தொகுதிகள் உள்ளன.
அதிலும் குறிப்பாக கிழக்கை இங்கு நாம் எடுத்த நோக்கினால், இளைஞர்கள் மத்தில் கட்சியின் பாங்கு:
கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்களின் மனோ நிலையில் வரலாறு பதிந்துள்ளதே தவிர அவர்கள் எவரும் வரலாற்றை கண்ட வரலாறுகள் எதுவுமில்லை. அப்படி இருக்கையில் ஒவ்வொரு ஊர்களிலும் பல்வேறு தேவைப்பாடுகள் உள்ளன.
இவற்றில் சிலர் வெறுமெனே முகநூல்களிலும், சமூக வலைத் தளங்களையும் கவனத்தில் கொண்டு அதில்வரும் மாயைகளுக்கு மாலைசூடுபவர்களாக மிளிர்கிறார்கள். எது எவ்வாறாயினும் சரி எதுவென்று அறிந்து அவற்றின் பால் நகரக்கூடியவர்களாக இல்லை.
தேவைகளையும், சந்தர்ப்பங்களையும் சாதகமாக்கும் அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் திருவிளையாட்டுக்களால் வீறுநடை போடுவது போல விசித்திரமெடுக்கின்றனர். ஆனால், எப்போதும் உண்மையும் சத்தியமும் வெல்லும் என்பதே இங்கு உண்மை.
இளைஞர்களின்_எதிர்பார்ப்பு:
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் வெறுமெனே குறுகிய சில எதிர்பார்ப்புக்களன்றி பரந்துபட்ட அறிவைத் தேடி அவற்றை பிரயோசனமாக எவ்வாறு விரிவாக்கலாம் என்றெண்ணக் கூடிய அளவுக்கு மிகைத்துவிட்டனர்.
வராலாறுகளையும், வெட்டிக் கதைகளையும் நம்பி ஏமாற்றக் கூடிய நிலைமைகள் இன்று களைபிடுங்கப்பட்டு காவியம் கூறும் சரித்திரங்களுக்கு அவர்கள் இசைவாக்கமடைந்துள்ளனர். இந் நிலைமையில் சில பிரதேசங்களில் சுய இலாப அரசியலில் மிகைத்து நிற்கும் சிலர் இக் கட்சியில் அமைப்பாளர்களாகிய துர்ப்பாக்கியங்களும் உள்ளன.
அவை தவிர அவர்களின் பொருத்தமற்ற சில செயற்பாடுகள் கட்சி அலுவலகத்தின் அடிவேர்களையும் சின்னாபின்னமாக்கக் கூடிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
இவற்றை நோக்குகையில், எத்தனையோ இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது நம்பிக்கையும், நல்லெண்ணமும் வைத்திருந்தாலும் ஒரு சிலரின் குறுகிய பாங்கினால் அமைச்சரை அனுக முடியாமல் வழிமாறும் நிலைமையுள்ளது.
உளவியல் ரீதியாக பார்ப்பினும், ஒரு மனிதனின் தவறுகள் மேலெழுந்து சுற்றும் வேகத்திற்கு அவர்களின் நல்லவைகள் வெளிப்படுவதில்லை. ஆனால், குறித்த மனிதரை நேரில் கண்டு பேசும் போதுதான் அவரிடமுள்ள குணங்கள் வெளியில் திறக்கப்படும்.
ஆனால், தாகத்துடனுள்ள பலருக்கு நீர் புகட்ட இவ்விடயங்களை சாதகமாக்கி சில அரசியல்வாதிகள் புடம்போட முனைகின்றனர்.
உண்மையிலேயே கட்சியின் வளர்ச்சியில் உண்மையான, மனங்கவர் போராளிகளுக்கும் இடம்வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் போது இன்னுமிரு மடங்கு கட்சி மிளிரும்.
இளைஞர்களை உள்வாங்கும் விதம்:
மேற்கூறிய அம்சத்தில் அகமளவில் உணர்வு கொண்ட பலர் உள்ளனர். அவர்களை கட்சியின் இளைஞர் படையணிக்கூடாகவும், கட்சியின் நாடளாவிய இணைப்பாளர்களுக்கூடாகவும் அறைகூவல் விடுத்து ஒவ்வொருவர் கருத்துக்களையும் உள்வாங்கி அவர்களின் தேவையறிந்து நிலைபேற்று உத்திகளுக்கு வழிவகுக்கும் போது நிச்சயம் சீற்றமுள்ள இயக்கமாக இக் கட்சி மாறும்.
இன்று வெறுமெனே கூஜா தூக்கும் நிலைமையில் சில பிரதேசங்கள் இருக்கின்றன. அதிகாரமிருந்தும் அவற்றை பிரயோகிக்காத உறுப்புரிமைகள் கட்சியின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
அப்படியானவர்களை களைபிடுங்க உண்மைப் பற்றுள்ள, கட்சியின் மீது மரியாதையும், தலைவர், தவிசாளர், தேசிய அமைப்பாளர்கள் ஆகியோர் மீது அபிமானமுமுள்ள திடம்பூண்டவர்களாக ஒவ்வொரு இணைப்பாளர்களும், அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டு நகர்த்தப்படவேண்டும்.
அப்போதுதான் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு உட்பட தேசிய ரீதியாக சான்று ஊன்றும் என்பது எதிர்கால நியதி ஆகும்!.
கட்சியின் வளர்ச்சியானது தேசியரீதியாக இன்னும் வியாபிக்க வேண்டிய கட்டாயத் தேவையில் உள்ளது. உரிமை மாத்திரமல்லாது உணர்வுபூர்வ அபிவிருத்திகளுக்கு அ.இ.ம.காவே பொருத்தமானது.
✍️ கியாஸ் ஏ. புஹாரி