Ads Area

சாய்ந்தமருது அபிவிருத்தி சம்பந்தமாக நானே ஆளுனரிடம் தனிப்பட்ட முறையில்‌ கோரினேன்.

சாய்ந்தமருது அபிவிருத்தி சம்பந்தமாக நானே ஆளுனரிடம் தனிப்பட்ட முறையில்‌ கோரினேன்; உண்மைக்கு‌ புறம்பான ஊர்வாதங்கள் வேண்டாம்; DR அல்தாப் மொஹைடீன் வேண்டுகோள்!

கெளரவ முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களூடாக சாய்ந்தமருது அபிவிருத்திக்கு முழு ஏற்பாட்டையும் செய்தவன் என்ற அடிப்படையில் உண்மையை கூற வேண்டியுள்ளது.

சாய்ந்தமருதின் அபிவிருத்தி சம்பந்தமாக ஆளுனரிடம் நான் தனிப்பட்ட முறையில்‌ வேண்டுதல் ஒன்றை விடுத்திருந்தேன். பாடசாலைகளின் அபிவிருத்தியும், சாய்ந்தமருது விழையாட்டு மைதான சுற்று மதில் மற்றும் கலாச்சார மண்டபம் என்பன எனது வேண்டுகோளில் பிரதான இடம் பெற்றிருந்தன.

அதன் பின்னராக பள்ளிவாசலுடன் சம்பந்தப்பட்ட எனது நன்பரூடாக விடயத்தை எற்றி வைத்தேன் அப்போது பள்ளி தலைமயும் தோடம்பழ அணியும் ஆளுனரை சந்திக்க ஆர்வப்பட்டுள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சகோதரர் றபீக்குடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் ஆழுனரிடம் வைத்த கோரிக்கைகளின் உள்ளடக்கத்தினை விவரித்தேன் அந்த கோரிக்களையே ஆளுநருடனான சந்திப்பில் முக்கியமாக பேசுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். வேறு விடயங்களையும் சகோதரர் றபீக் விழக்கி இருந்தார், பின்னராக பள்ளி‌ தலைவருடனும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நான் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை‌ செய்து விட்டு‌ மீண்டும் அழைக்கும் வரை காத்திருங்கள் என்று கூறிவிட்டு அழைப்பை முடித்துக்கொண்டேன்.

பின்னராக உடனடியாக ஆளுநருடன் பேசி சந்திப்புக்குரிய ஏற்பாடுகளை செய்து முடித்தேன், ஆளுனரின் செயலாளர்களும் மிகவும் உதவியாக இருந்தார்கள். மீண்டும் ஊரில் உள்ள எனது நண்பருக்கும் சகோதரர் றபீக் அவர்களுக்கும் அழைப்பை ஏற்படுத்தி ஆளுநருடனான சந்திப்புக்குரிய நேரசூசியை தெரிவித்தேன்.

ஏற்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பள்ளி தலைவர் மற்றும் பிரமுகர்களும் குறித்த நாளில் ஆளுநரை சந்திக்க திருகோணமலை பயணத்தை ஆரம்பித்தார்கள். பிரித்தானிய நேரம் காலை 2.35 அளவில் என்னை அழைத்து "தம்பி நாங்கள் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்" என்றார்கள்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளேன் திருகோணமலை சென்றதும் என்னை அழையுங்கள் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டேன்.

மீண்டும்‌ அழைப்பு வந்தது "தம்பி‌ நாங்க வந்து சேந்துட்டம்" என்று கூறினார்கள். உங்களை ஒருவர் வந்து அழைத்துச் செல்வார் அது வரை சற்று காத்திருங்கள் என்று கூறிவிட்டு, ஆளுனருக்கும் அவரது செயளாலருக்கும் உடனடியாக சாய்ந்தமருது அணியின் வருகையை ‌தெரிவித்தேன் ( நேரம் மதியம் 12).

அன்றைய நாள் ஆளுநரின் அலுவலகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி‌ இருந்தது மற்றும் ஆளுநரும் கொழும்பு செல்ல வேண்டிய நிலையும் இருந்தது இதன் காரணமாக ஆளுநரின் சந்திப்புகளும் ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் பிற்போயிருந்தன. இதற்கு இடை நடுவே ஆளுநர் ஏற்கனவே கொழும்பு சென்று விட்டதாக வதந்தி ஒன்றை பரப்பிவிட்டார்கள் சிலர், இதை‌ செவியுற்ற சாய்ந்தமருது ‌சார்பாக வந்த ஒருவர் "லன்டன்ல இருக்கிற ஆக்கள்ற கதையெல்லாம் பெரிசா எடுத்துக்கு வந்து அழைஞ்சதுதான் மிச்சம்" என்று கூற வாகனத்தில் காத்திருந்த சாய்ந்தமருது குழுக்குள் ஒரு சழிப்பும்‌ ஏமாற்ற சூழ்நிலையும் தோன்றி இருந்தது.

மீண்டும் நண்பர் அழைக்கிறார் "என்ன மச்சான் கவர்னர் இல்லயாமே எல்லார்ர இடுப்பும் எறங்கிட்டு" என்றார். ஏன் என்று கேட்டேன், கேழ்வியுற்ற வதந்தியை எனக்கு‌ கூறினார், அப்படியா சற்று பொறுங்கள் என்று கூறி விட்டு ஆளுநருக்கு‌ அழைப்பை‌ ஏற்படுத்தி நிலைமையை கூறினேன், ஆளுநர் கூறினார் நிச்சயம் சந்திப்பு ‌நடைபெறும், எதிர்பாராத விதமாக மாகாணசபை செயளாலர்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டதனால் எமது சந்திப்பு‌ சற்று முன்‌பின் ஆகலாம் என்றார். நான் "மினிஸ்டர்‌, சந்திப்புக்குரிய நேரத்தை‌ ஒரு வொயிஸ் கட்டாக அனுப்புனா நான் அவங்களுக்கு அனுப்பி வப்பேன்" என்றேன். நான் எப்பொழுதும் அவரை மினிஸ்டர் என்று அழைப்பது வழக்கம். அவரும் உடனடியாக வொயிஸ்‌ கட்டை‌ அனுப்பினார். "டொக்டர், சாய்ந்தமருது‌ ஆக்களை 3 மணிக்கு வர சொல்லுங்க" அதுதான் வொயிஸ் கட்டின் உள்ளடக்கம்.

நான் அந்த வொயிஸ் கட்டை சகோதரர் றபீக்குக்கும் எனது நண்பருக்கும் அனுப்பி விட்டு‌ அழைப்பை ஏற்படுத்தி நிலைமையை எடுத்து கூறிவிட்டு நீங்கள் தொழுது சாப்பிட்டுட்டு வரும்போது நேரம் சரியாக இருக்கும் என்று கூறினேன், அவர்களும் அதேபோல் செய்தார்கள்.

திரும்பி வந்தபோது ‌அங்கே காத்திருந்த பாதுகாவலர் "நீங்கதானா டொக்டர் அனுப்பின ஆக்கள்?" என்றார். சாய்ந்தமருது அணி ஆம்‌ என்று‌ கூற, சாய்ந்தமருது அணி தனியாக கூளிருட்டப்பட்ட கூடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டது. நேரடியாக எனக்கு‌ அழைப்பு‌ ஏற்படுத்தப்பட்டது, பள்ளி தலைவர் "தம்பி நாங்க உள்ளுக்கு வந்திட்டம்" என்றார். அழைப்பை தொடர்ச்சியாக வைக்கச் சொன்னேன். "கவர்னர் வந்துட்டார்" என்றார் நண்பர்.
"டொக்டர் விஷயத்த சொன்னார்" என்றார் ஆளுனர். பள்ளி தலைவர் பேச்சை ஆரம்பித்தார் பின் ஒவ்வொரு‌ வேண்டுகோலாக முன் வைக்கப்பட்டது, ஆளுநரும் "இதை இன்ஷா அழ்ழாஹ் செய்யலாம் அல்லது இப்படித்தான் செய்யலாம்" என்று பதில் கூறிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் மறுபுறத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தேன் நான்.

சந்திப்பு‌ முடிவை எட்டும் தருவாயில் எனது நண்பர் ஆளுநரை நோக்கி "சேர் அல்தாப்‌ லைன்ல இருக்கர் என்றார்" ஆளுநர் நண்பனின் அலைபேசியை வாங்கி "இப்ப சந்தோசம்தானே டொக்டர்" என்றார். "ஜஸாகமுழ்ழாஹ் மினிஸ்டர் உங்களுக்கு‌ அழ்ழாஹ் மேலும் ரஹ்மத்து‌ செய்வான்" என்று கூறினேன் "நான் பிறகு பேசுரன் டொக்டர்" என்று கூறிவிட்டு அலைபேசியை மீண்டும் நன்பரிடம் கொடுத்து விட்டார்.

சாய்ந்தமருது அணி‌ ஊர் திரும்புவதற்காக மீண்டும் வாகனத்தில் ‌ஏறியது. நண்பன் மீண்டும் அழைத்தார், ஆனால் பேசியதோ பள்ளி தலைவர் "தம்பி அழ்ழாஹ் உங்களுக்கு‌ ரஹ்மத்து‌ செய்வான் தம்பி, வந்த விஷயம் நூத்துக்கு இருநூறு‌ வீதம் சக்ஸஸ் தம்பி என்றார். "எனது பூர்வீக ஊருக்கு‌ நான் எதை‌ செய்யனுமோ அதத்தான் நான் செய்தேன்" என்றேன்.

மனதில் ஒரு பெரும் சந்தோஷம் நிலவியது.

அன்றைய சந்திப்பினூடக ஆளுநர் மூலம் பெறப்பட்ட ஒதுக்கீடுகள் இன்று வந்தடைந்துள்ளதாக அறிய கிடைத்தது இந்த பின்னணியில் ஊர் பாகுபாடுகள் முகநூலில் பேசப்படுகின்றன. இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. 

இந்த ஒதுக்கீடு நான் நேரடியாக சம்பந்தப்பட்டு ஏற்பாடு செய்து எனது பூர்வீக மண்ணுக்கு எனது கடைமையை நிறைவேற்றியமையாகும். ஆகவே இங்கு ஊர் பாகுபாடோ அல்லது யாரையும் யாரும் ஒதுக்கி வைத்தார்கள் என்ற பேச்சுக்கோ இடமில்லை.

இதேபோலதான் கல்முனை மற்றும் நட்பிட்டிமுனை விடயமாகவும் ஆளுநரை ஒரு குழுவை சந்திக்க வைத்து பல அபிவிருத்தி பணிகளின் முன்னெடுப்பின் இடைநடுவேதான் துரதிஷ்டவசமாக‌‌ தீவிரவாத குண்டு வெடிப்பும், ஆளுநர் பதவியில் ‌இருந்து நீங்கியமையும் இடம்பெற்றது.

முகம் சுழிக்காத எங்களது முன்னாள் ‌ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும் என்றும் அன்புடன் அழைப்புகளை ஏற்கும் அவரது செயலாளர்‌களுக்கும், மற்றும் நண்பன் காலிது உதுமான்கண்டு அவர்களுக்கும் எனது தனிப்பட்ட மற்றும் ஊர்சார்ந்த மனப்பூர்வமான நன்றிகளையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே‌ உண்மைக்கு‌ புறம்பாக ஊர்வாதங்களை‌ மீண்டும் உசுப்பேற்ற வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கலாநிதி. அல்தாப் மொஹைடீன் 


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe