Ads Area

கல்முனை மண் நன்றியோடு நினைவு கூற வேண்டிய மாமனிதர் மறைந்த நாள் இன்று.

M M Mifras Mansoor

மாமனிதர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ. ஆர். மன்சூர் அவர்கள்  இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எல்லோராலும் நேசிக்கப்பட்டவர். காரணம் அவர் இன நல்லிணக்கக் கோட்பாட்டை சிரமேற்கொண்டு செயற்பட்டவர். தமிழ் சகோதர உறவுகளையும் தன் உறவாக நினைத்து சம வாய்ப்பளித்தவர்.

கலாநிதி மர்ஹூம் மன்சூர் அவர்கள் யாழ்ப்பாணம் , முல்லைதீவு ஆகிய மாவட்ட அமைச்சராக செயற்பட்ட காலங்களில் தமிழ் - முஸ்லிம் உறவு நிலைக்க வேண்டும் என மன விருப்புடன் செயற்பட்டவர்.

அன்று மர்ஹூம் மன்சூர் அவர்கள் ஆற்றிய சேவை இன்றும் கல்முனையின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. "மர்ஹூம் மன்சூர் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் மீண்டும் கிடைக்க மாட்டாரா? "என ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்.

பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள சோரம் போக விரும்பாத நேர்மையான தியாகியாக இறுதி வரை செயற்பட்டு வந்தவர்.

"எவ்வளவோ செய்து விட்டாய்.., 
எம் மனதை வென்று விட்டாய்.....!
மீண்டும் ஒரு தலைவர் 
உம்மைப்போல் கிடைப்பாரோ...!,
நாங்கள் நன்றி உடையவர்களா? 
இறைவன் எங்களை சோதித்து
உன் இழப்பை உணர்த்துகின்றானோ! 

என்று எண்ணத் தோன்றுகிறது..!"

ஃஏகனே! அவருடைய மண்ணறையை சுவனபூங்காக்களாக்கி அருள் புரிவாயாக..! அவருடைய மண்ணறையை வெளிச்சமாக்கி இரக்கம் காட்டுவாயாக..!

யா அல்லாஹ்! அவருடைய நற்காரியங்களை அங்கீகரித்து அவர் அறியாது செய்த குற்றச் செயல்களை பொருட்படுத்தாது மன்னித்து அவரையும் எங்களையும் சுகபோகச் சுவனபதியில் ஒன்று சேர்ப்பாயாக..!!

இறைவா!! அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து நபி (ஸல்) அவர்களின் சபாஆத்தையும் பெற்றும் அவர்கள் மீதும் தோழர்கள் மீதும் நல்லாசி புரிந்து ஜன்னத்துல் பிர் தௌஃஸ் எனும் சுவனம் புக அருள் புரிவாயாக..

ஆமீன்....ஆமீன்...யாரப்பல் ஆலமீன்..!!
வல்ஹம்துலில்லாஹி ரப்பல் ஆலமீன்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe