உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களில் அரச நிறுவனங்களை பெயரிடும் நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது சிறந்த விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன்னர், சகல அரசியல்கட்சிகளுக்கு அறிவித்தோம். 75 சதவீதமான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.