Ads Area

கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையினால் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு.


கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையினால் பாணின் விலையினை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1 இறாத்தல் பாணின் விலையை, இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நேற்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை 7.54 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாகவும் இது ஒப்பீட்டளவில் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதனால் இலங்கையில் பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பாணின் விலை மட்டுமே அதிகரிக்கப்படுவதாகவும் ஏனைய சிறிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அததெரணன.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe