கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இன்று (30) கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசவுமில்லை. தீர்மானம் எடுக்கவுமில்லை. அரசாங்கப் பதவிகளைப் பெறும் ஆர்வமும் தனக்கு இப்போது இல்லை பல்கலைக்கழகம் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் தீவிரமாக இருப்பதாகத் தெரிவித்த ஹிஸ்புல்லா, தான் ஆளுநராகப் பொறுப்பேற்பதை ஜனாதிபதி விரும்பினால், ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்பேன் என்றார்.