கொழும்பில் மீண்டும் இரட்டைத் தட்டு பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 1952 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரிடிஷ் லேலண்ட் வகையான இரட்டை தட்டு பஸ்ஸொன்று மீளுருவாக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
கிராமத்துக்கு மதிப்பான மக்கள் போக்குவரத்து சேவை மற்றும் கண்காட்சியின் போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இரட்டை தட்டு பஸ் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டது.