மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
நீண்டகால பாவனைக்கு உதவும் வகையிலும், தகவல் பரிமாற்றத்தை துல்லியமாகவும் செய்யக் கூடிய வகையிலுமான நீடித்துழைக்கும் கேபுள் - Durability Cable யை தயாரித்து அசத்தியுள்ளார் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவன் அப்துல் கபூர் முஹம்மட் ஷிபார்க்.
இவர் தயாரித்துள்ள கேபுளானது Coaxial வகை கேபுள் போன்றதாகும். இது சாதாரணமாக நாம் வீடுகளில் பயண்படுத்தும் குறிப்பாக தொலைக்காட்சி அண்டனா போன்றவற்றுக்கு பயண்படுத்தும் கேபுள் போன்று தகவல்களை மிக துல்லியமாகவும், நேர்த்தியாகவும் கடத்தக் கூடியதோடு மிக நீண்டகாலம் பாவிக்கக் கூடியதுமாகும் அத்தோடு துருப்புடிக்காததுமாகும் இதுவே இவர் தயாரித்துள்ள Durability Cable இன் சிறப்பம்சமாகும்.
மிகப் பயனுள்ள இவரது இத் தயாரிப்புக்கு National Intellectual Property of Sri Lanka வினால் காப்புரிமை அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
மாணவர் சிபார்க் சம்மாந்துறையின் முதலாவது புகையிரத சேவையாளரான ஓய்வு பெற்ற எம்.பி.ஏ.கபூர் அவர்களின் புதல்வரும் சம்மாந்துறையின் பிரபல புகைப்படக் கலைஞர் முஹம்மட் பிறோஸ் அவர்களின் சகோதரருமாவார்.