Ads Area

மனநோய் என்றால் என்ன? அவசியம் வாசியுங்கள்-வீடியோவையும் பாருங்கள் (வீடியோ இணைப்பு)

டாக்டர் - மொஹமட் மாஹிர்.

இன்று காலை திடீரென ஒரு செய்தி என்னை அடைகின்றது. ஊரில் இரண்டு பச்சிளம் பாலகிகள் மனநோயாளியான தங்கள் தாயினால், கழுத்து வெட்டப்பட்டு மரணமடைந்ததாக. செய்தி என்னவோ கேட்பதற்கும், நம்புவதற்கும் இயலாததாக இருந்தாலும் உண்மையாக ஏதோ ஒன்று நடந்துள்ளது. 

அடிப்படையில் பார்க்கப் போனால் மனநோய் அல்லது மன ஆரோக்கியம் (Mental health/ mental wellbeing) என்பதைப் பற்றி எமது சமூகம் அறிந்துள்ளதை இந்த வகையிலேயே கூறலாம்.

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
என்னுள் கவலையை தாங்க முடியவில்லை.

இந்த mental wellbeing பற்றி ஒரு செய்தியை சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்று உள்ளது. அந்த வகையில் இந்த ஒரு சிறு ஆக்கம்!

மன நோய் மற்றும் குடும்பம்

மனநல கோளாறுகள் அரிதானவை மற்றும் "வேறொருவருக்கு நிகழ்கின்றன" என்று இன்று எம்மில் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், மனநல கோளாறுகள் பொதுவானவை மற்றும் உலகளாவிய ரீதியில் பரவலாக இருக்கின்றன.

உலகளவில் 970 மில்லியன் மக்களுக்கு 2017 ஆம் ஆண்டில் மனநோய் மற்றும் substance abuse இருப்பதாக WHO ஆல் மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சோகம் என்னவெனில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவருக்கு மன நோய் இருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.

உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு மன அல்லது உணர்ச்சி பிரச்சினை இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், நம்பிக்கையும் உதவியும் இருப்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மன நோய் என்றால் என்ன?

மன நோய் என்பது சிந்தனை மற்றும் / அல்லது நடத்தையில்(Thought or Behaviour) லேசானதிலிருந்து கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தும் ஒரு வகை நோயாகும், இதன் விளைவாக வாழ்க்கையின் சாதாரண கோரிக்கைகள் மற்றும் நடைமுறைகளை சமாளிக்க இயலாது போகும் நிலை ஏற்படலாம்.
நம்முள் பெரும்பாலோனோர், உடல் ரீதியில் ஏற்படும் காய்ச்சல், தலையிடி, வயிற்றுவலி போன்றன மட்டுமே வருத்தம் என எண்ணிக்கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் பார்க்கப்போனால் 200 க்கும் மேற்பட்ட வகைப்படுத்தப்பட்ட மனநோய்கள் உள்ளன. 

மனச்சோர்வு(Depression) இருமுனை கோளாறு(Bipolar affective disorder) ஸ்கிசோஃப்ரினியா(Schizophrenia) மற்றும் கவலைக் கோளாறுகள்( Anxiety disorders) ஆகியவை மிகவும் பொதுவான கோளாறுகள்.  அறிகுறிகளில் மனநிலை, ஆளுமை, தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் / அல்லது சமூக விலகல் ஆகியவை அடங்கும்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது தொடர்ச்சியான நிகழ்வுகளின் காரணமாக மனநல பிரச்சினைகள் அதிக மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றே, மன நோய்களும் பெரும்பாலும் உடல் மற்றும் உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியானவை. சுற்றுச்சூழல் அழுத்தங்கள், மரபணு காரணிகள், உயிர்வேதியியல் ஏற்றத்தாழ்வுகள் அல்லது இவற்றின் கலவையால் மன நோய்கள் ஏற்படலாம். சரியான கவனிப்பு மற்றும் சிகிச்சையுடன் பல நபர்கள் ஒரு மன நோய் அல்லது உணர்ச்சி கோளாறுகளை சமாளிக்க அல்லது மீட்க கற்றுக்கொள்கிறார்கள்.

Mental disorders எந்த ஒரு வயது நிலையிலும் ஏற்படக்கூடியது!

பின்வரும் நிலைகள் ஏற்பட்டால் நாம் இப்படியான ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளோமா என எண்ணத்தோன்றும்!

*பெரியவர்கள், இளம் பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தில்( Adult and Adolescent symptoms)*

01.  குழப்பமான சிந்தனை
02.  நீடித்த மனச்சோர்வு (சோகம் அல்லது எரிச்சல்)
03. தீவிர உயர்வுகள் மற்றும் தாழ்வுகளின் உணர்வுகள்.
04.  அதிகப்படியாக அச்சமடைதல், கவலைகள்
05. சமூகத்திலிருந்து தனித்துப் போதல்(Social withdrawal)
06. உணவு அல்லது தூக்க பழக்கத்தில் வியத்தகு மாற்றங்கள்.
07. கோபத்தின் வலுவான உணர்வுகள்(Strong anger feelings)
08. விசித்திரமான எண்ணங்கள் (பிரமைகள்)
இதை Delusions என்றழைப்போம்.
09. இல்லாத விஷயங்களைப் பார்ப்பது அல்லது கேட்பது. இதை Hallucinations என்று அழைக்கப்படும்.
10. அன்றாட பிரச்சினைகள் மற்றும் செயல்பாடுகளை சமாளிக்க இயலாமை.
11. தற்கொலை எண்ணங்கள்
12. விவரிக்கப்படாத பல உடல் நோய்கள்(Unexplained physical ailments)
13. பொருள் பயன்பாடு- இதை போதைப்பொருள் என்றும் கூறலாம். (Substance use)

இப்படிப்பட்ட பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் எமது சமூக அமைப்பில் இந்த மனநோயை ஒரு எதிர்மறையான விதத்தில் பார்க்கும் நிகழ்வே அதிகமாயுள்ளது.


இதன்காரணமாக அதிகமான மனநோயாளிகள் தாமோ, தமது பிள்ளைகளோ, தமது குடும்பமோ இந்த உலகில் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற ஒரு நிலையின் காரணமாக பிழையான இடங்களை நாடியும், பேய் பிசாசு விற்கு பரிகாரம் பட்டியலும் திரிந்து நோயை முற்ற வைத்துவிடும் ஒரு பரிதாபகரமான உலகில் நாமும் வாழ்கிறோம்.

ஆகவே சமூகத்தையையும் மற்றவைகளை யும் தூக்கி வீசிவிட்டு நான் மேற்கூறிய சிறு அறிகுறிகள் தோன்றிய ஆரம்பத்திலேயே உரிய வைத்தியரை நாடி ஆலோசனை பெறல் வேண்டும்.

அதுமட்டுமன்றி இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட மேலானது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பும் உதவியும்.

இன்று இந்த நோய்களால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் குடும்பத்தாலும் மற்றைய உறவினர்களாலும் கைவிடப்படுவதன் காரணமாக நோயானது முற்றிச்சென்று கடைசியில் கைசேதப்படும் நிலைமையே ஏற்படுகின்றது.

ஆகவே இந்த எதிர்மறையான எண்ணங்களை கைவிடுவோம். mental wellbeing என்பது சிறப்பாக அமைந்திட நாமும் இன்றிலிருந்து பாடுபடுவோம்.

இந்த உலகில் மன நோய்களிலிருந்து மீட்சிபெறுவதற்கான நம்பிக்கை உள்ளது என்பதையும், சிகிச்சையுடன் மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் நிறைவான வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இந்த link ஐ கிளிக் செய்து மேலதிக தகவலை அறியலாம்.https://ourworldindata.org/mental-health?fbclid=IwAR3sDtaV3RGWMkFUlbAChkf3oSJWuN5sOdPKJOgASXzqywLXvWGqR_jKJD0


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe