மதுரை:
மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் சந்தானலட்சுமி (வயது 29) தன்னை சாமியார் உள்பட 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதத்தை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். இதற்காக எனக்கு அறிமுகமான பூமிநாதன், ஆறுமுகம் ஆகியோர் உதவியை நாடினேன். அவர்கள் என்னை கணவருடன் சேர்த்து வைக்க ரூ.1½ லட்சம் வரை கேட்டனர். அதனை பல தவணைகளில் கொடுத்தேன்.
இதனை தொடர்ந்து சாமியார் ஒருவர் மூலம் என் கணவருக்கு வசியம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக கூறினர். அதன்படி சாமியார் ஜோதி என்பவரை அறிமுகம் செய்தனர்.
பின்னர் அனைவரும் காரில் சென்று பூஜை பொருட்களை வாங்கினோம். அப்போது திடீரென அருள் வந்ததாக கூறிய சாமியார் நமது முயற்சிக்கு தடங்கல் வருகிறது என கூறினார். அதனை தடுக்க எனது உடலில் ஒருவித மை போன்ற பொருளை தடவினார். அதன்பிறகு நான் மயங்கிவிட்டேன்.
சில மணி நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்தபோது எனது ஆடை கலைந்திருந்தது. நான் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால் அவர்களுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்போது பூமிநாதனின் தந்தை கரந்தமலை போனில் அழைத்து மிரட்டல் விடுத்தார். நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கஞ்சா வியாபாரிகளை வைத்து என்னை சீரழித்துவிடுவதாக மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பரபரப்பு புகார் கொடுத்த பெண் ஏட்டு சந்தானலட்சுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதன் அடிப்படையில் ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடியில் ஈடுபடுதல், பெண்ணை தவறான உள்நோக்கத்துடன் அணுகுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணின் நடத்தையை கீழ்த்தரமாக விமர்சித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.