அரபுக்கல்லூரிகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்பட்டால் சட்டத்தை மீறிச் செயற்பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும் என்றும் நிட்டம்புவ பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பஸ்யால எல்லரமுல்லயில் இயங்கிவரும் அரபுக் கல்லூரி அப்பிரதேசத்தில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை இல்லாமற் செய்துள்ளதாகக் கூறி அரபுக் கல்லூரிக்கென ஆலோசனைச் சபையொன்றினை நிறுவி அதில் ஒரு பௌத்த பிக்குவுக்கும் மற்றும் சிங்களவர் ஒருவருக்கும் இடம் வழங்குமாறு தேரர்களாலும் பிரதேச சிங்களவர்களாலும் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு பொலிஸாரினால் தீர்வு காணப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை சம்பந்தப்பட்ட கலல்பிட்டிய தாதுகன்த பன்சலை தேரரையும் மற்றும் சிலரையும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருந்தார். அரபுக் கல்லூரியின் நிர்வாகிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக்கூட்டம் தொடர்பில் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். சுஹைப் (தீனி) கருத்து தெரிவிக்கையில்;
‘நாங்கள் மத்ரஸாவில் போதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தோம். குறிப்பிட்ட தேரர் அரபுக்கல்லூரியின் பதிவு தொடர்பிலே சந்தேகம் கொள்வதாகத் தெரிவித்தார். அதன் பின்பு பதிவு மேற்கொண்டிருப்பதற்கான அத்தாட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
குருமார் உட்பட்ட குழுவினருக்கு பொலிஸார் அறிவுரைகளை வழங்கினார்கள். அரபுக்கல்லூரிகள் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் காணப்பட்டால் சட்டத்தை மீறிச் செயற்பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும் என்றும் நிட்டம்புவ பொலிஸார் வேண்டிக்கொண்டனர். எல்லரமுல்ல சபீலுர் ரசாத் அரபுக் கல்லூரி சர்ச்சை பொலிஸாரால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது என்றார்.
vidivelli