Ads Area

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தினால் மீன்களின் விலை உயர்வு.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற கடும் வெப்பத்தினால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துவில் முதல் பெரிய நீலாவணை பகுதி வரையுள்ள கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வீதம் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு , கடும் வறட்சியுடனான காலநிலை என்பன மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமென வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோ விளாமீன் 900 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1500 ரூபாவாகவும் வளையா மீன் 1000 ரூபாவாகவும் நண்டு ஒரு கிலோ 950 ரூபாவாகவும் காணப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

நன்னீர் மீன் இனங்கள் சில இடங்களில் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும் விலை அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்தனர்.

News1st
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe