Ads Area

திருமணமாகாத சம்மாந்துறை வாலிபர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் போட்டி நிகழ்ச்சி

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நாம் அறிந்திருக்கின்றோம் ஆனால் அது இன்று சொக்கத்தங்கத்தினாலும். சொகுசு வீடுகளினாலும், சொகுசு வாகனங்களாலும், பணத்தாலும், பதவிகளினாலும், பட்டப் படிப்புகளினாலும் , பல ஏக்கர் வயல் காணிகளாலும்  நிர்ணயிக்கப்படும்  படுபாதக பரிதாப நிலையை உலமாக்கள் தொடக்கம் ஊர்மக்கள் வரை   ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே.

இந்த நிலையை ஓரளவாவது ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்  சம்மாந்துறை24.கொம் இணையத்தளமும் சீதனம் வாங்கா வாலிபர் சங்கமும் இணைந்து நடாத்தும் போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் sammanthurai24.com இணையத்தளத்தில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தால் அவர்களுக்கு ஒரு ரீ சேட்டை  பரிசாக வழங்குவதோடு அவர்களது  புகைப்படங்களும் sammanthurai24.com இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். போட்டிக்கான கேள்விகள் விரைவில் சம்மாந்துறை24 .கொம் இணையத்தளத்தில் அறிவிக்கப்படும் தினமும் sammanthurai24.com இணையத்தளத்தில் இணைந்திருங்கள்.

போட்டிக்கான நிபந்தனைகள் 

1. இருபது கேள்விகள் கேட்கப்படும் இருபதுக்கும் சரியான பதில்கள் வழங்குபவர்களுக்கு மட்டுமே ஒரு ரீ சேட் இலவசமாக வழங்கப்படும் அத்துடன் ஒரு போனஸ் கேள்வி கேட்கப்படும் அதற்கு மிகச்சரியான பதிலை    வழங்குபவர்களுக்கு இரண்டு ரீ சேட் வழங்கப்படும்.

2. பதில்கள் நாங்கள் அறிவிக்கும் திகதிக்கு முன்னதாக எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

3. போட்டியில் பங்குபற்றுபவர்கள் அவர்களது பெயர், தொலைபேசி இலக்கத்தையும் பதிலை எழுதி அனுப்பும் போது அனுப்பவேண்டும்.

4. போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சம்மாந்துறை 24 இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

5. இந்த முயற்சியை நாங்கள் முதன் முதலாக செய்வதால் இந்தப் போட்டியை இம்முறை சம்மாந்துறை வாலிபர்களுக்கு மட்டும் நடத்தத் தீர்மானித்துள்ளோம். இதில் நாங்கள் எதிர்பார்க்கின்ற வெற்றி கிடைத்தால் நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் ,எதிர்வரும் காலங்களில் நாடு பூராவும் இதனை நடாத்த தீர்மானித்துள்ளோம் .

6. போட்டி முடிந்தபின் சரியான பதில்கள் sammanthurai24.com அறிவிக்கப்படும்.

7. பெரும் பாலான கேள்விகளுக்கான பதில்களை அறிய கீழேயுள்ள இணையத் தளங்களை பயன்படுத்தலாம்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe