2.குர்ஆனின் கட்டளைப்படி சொத்துப் பங்கீட்டில் ஒரு ஆண் பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கப்படவேண்டும். ஒரு பெண் பிள்ளைக்கு எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் ?
3. இரண்டாவது கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதிலின்படி உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவர் அப்படி ஒரு பங்கீட்டை செய்திருக்கின்றாரா ? அப்படி செய்தவரை ஆதாரத்துடன் காட்டினால் அவருக்கு ஒரு ரீ சேட் இலவசமாக வழங்கப்படும்.
4. 1) "அழகுள்ள பெண்"
2) "அந்தஸ்துள்ள பெண்"
3) "பணவசதி படைத்த பெண்"
4) "மார்க்கப்பற்றுள்ள பெண்"
இந்த நான்கில் யாரை திருமணம் முடித்தால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று றஸூலுல்லாஹ் சொன்னார்கள் ?
5. மஹர் கொடுக்க ஒரு வசதியுமே இல்லாத ஒரு ஸஹாபியிடம் றஸூலுல்லாஹ் மஹராக எதைக் கொடுக்கச் சொன்னார் ?
6. கலீபா உமருடைய காலத்தில் ஒரு நாள் மதீனாவில் கலீபா உமரும் அவருடைய நண்பரும் நள்ளிரவில் ரோன்து போய்க்கொண்டிருந்த சமயத்தில் கலீபா உமர் அவர்கள் களைப்படைந்து ஒரு வீட்டின் மதில் ஓரமாக உட்கார்ந்து சாய்ந்து கொண்டிருந்த வேளையில் அந்த வீட்டிலிருந்து இருவர் பேசிக்கொள்வது கலீபா உமர் அவர்களுக்கும் அவரது நண்பருக்கும் கேட்கின்றது.
'மகளே ! எழுந்து அந்தப்பாலை தண்ணீருடன் கலந்து விடு
அதற்கு அந்த மகள் தாயே ! நீங்கள் இன்று அமீருல் முஃமினீன் இட்ட கட்டளையை கேட்கவில்லையா ?
அதற்கு தாய் : அது என்ன ?
மகள் : "தண்ணீருடன் பாலை கலக்க வேண்டாம்" என்று சத்தமாக உரத்த குரலில் சொல்லும்படி ஒருவரை கலீபா உமர் கட்டளையிட்டதை.
அதற்கு தாய் : "எழுந்து பாலைத்தண்ணீருடன் கல". நீ இருக்கும் இடத்தில் உமர் உன்னை பார்த்துக் கொண்டா இருக்கின்றார் ?
அதற்கு மகள் தாயிடம் சொன்னார்: என்னை கலீபா உமர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை ஆனால் உமறைப் படைத்த அந்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
இதைக் கேட்ட கலீபா உமர் என்ன செய்தார் ? இந்த மகளுக்கு நடந்த கதி என்ன? இந்த சம்பவத்தின் முடிவு என்ன ???
7. "மாமனாரிடம் பிடுங்கியதை மகள் வழியில் பறி கொடுப்பாய்" என்ற புது மொழியின் சரியான அர்த்தம் என்ன ?
8. "மாமனார் தந்த காணி"
"மாமனார் தந்த காசு"
"மாமனார் தந்த வாகனம்"
"மாமனார் தந்த நகைநட்டு"
"மாமனார் தந்த வீடு"
"மாமனார் தந்த கட்டில்"
"மாமனார் தந்த மகள்"
ஆஹா ! இந்த யதார்த்தத்தைக் கேட்கும் போது சும்மா அதிருதில்ல. ..... உங்கள் உள்ளத்தில் உண்மையில் உதிர்க்கும் உணர்வுகள் என்ன??
9. இப்படி, சீ -தனம் வாங்கி செய்யும் திருமணத்தின் "அழைப்பிதழை" இன்று றஸூலுல்லாஹ் உயிருடன் இருந்தால் அதை அவருக்கு உங்களால் கொடுக்க முடியுமா ?
10. பல லட்சக்கணக்கில் மாமனாரிடம் சீ -தனமாக வாங்கிவிட்டு 101 ரூபா, 501 ரூபா, 1001 ரூபா என்று கொடுக்கும் மஹர் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
11. 10ம் கேள்விக்கு உங்கள் பதில் "இல்லை" என்றால் அப்போ இஸ்லாமிய முறைப்படி எவ்வளவு மஹர் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கவேண்டும் ?
12. இலங்கையில் சிங்கள இளைஞர்கள் கூடுதலாக சீ-தனம் வாங்குகின்றார்களா ? முஸ்லிம் இளைஞர்கள் கூடுதலாக சீ -தனம் வாங்குகின்றார்களா ?
13. "சீதனம்" - "சீ "- தனம்
"வரதட்சனை" - "வரும்" தட்சனை
"கைக்கூலி" - கையால் கொடுக்கப்படும் "கூலி"
"கொடுப்பனவுகள்" - "கொடுக்கப்படும் கனவுகள்"
இந்த வார்த்தைகளே "கேவலமாக" இருக்கும்போது இதை வாங்கி அனுபவிப்பவர்களுக்கு அது "கேவலமாக" தெரியாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?
14. "நாங்கள் ஒன்றும் சீதனமாகக் கேட்கவில்லை நீங்கள் உங்கள் மகளுக்குக் கொடுக்கவேண்டியதை கொடுங்கள்" என்று நாசூக்காக நாகூசாமல் கூறும் பெற்றோரை தமிழில் எப்படி அழைப்பது ?
15. ராத்தா, தங்கைமாருடன் பிறந்த ஒரே காரணத்துக்காக அவர்களை கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக தன் வாலிபத்தைத் தொலைத்து வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் வாலிபர்களுக்காக ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் உங்களால் செய்யக்கூடிய சிறந்த செயற்பாடு என்ன ?
16. "டாக்டர் மாப்பிள்ளை" என்று நேத்ரா ரீவீயில் ஒளிபரப்பாகிய கதையில் டாக்டரின் வாப்பாவாக நடித்து "சீ -தனக்கொடுமைக்கே ஒரு புதிய இலக்கணம்' வகுத்த சம்மாந்துறை நடிகரின் பெயர் என்ன ? இதை அறிய "டாக்டர் மாப்பிள்ளை" என்ற கீழே உள்ள வீடியோ லிங்கை பார்க்கவும்.
https://www.facebook.com/SammanCommunity/videos/1138858382821131/
17. இன்றைய "சீதனச்சந்தையில்" ஒரு அரசாங்க உத்தியோகத்தரின் பெறுமதி என்ன ? காணி, வீடு, காசு எவ்வளவு ?
18. ஒரு சில பள்ளிவாசல்களைத்தவிர, பெரும்பாலான பள்ளிவாசல்களில் அடிக்கடி "சீதனத்தின் சீர்கேட்டைப் பற்றி" குத்பா பிரசங்கங்களில் உலமாக்கள் பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன ?
19. சில உலமாக்களும் "சீ-தனம்" வாங்குகின்றார்கள். பல உலமாக்கள் "சீ-தனம்" வாங்கி நடாத்தும் கல்யாண வைபவங்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள் இவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ?
20. "சமூகச் சீர்கேடான" இந்த சீதனப் பிரச்சினையை எப்படி நமது சமூகத்தில் இருந்து அடியோடு ஒழித்துக் கட்டலாம் உங்கள் ஆலோசனைகள் என்ன ?
மேலேயுள்ள இருபது (20) கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதி அனுப்புபவர்களுக்கு ஒரு ரீ சேட் பரிசாக வழங்கப்படும்
போனஸ் கேள்வி
இந்தக் கேள்விக்கு மிகச்சரியான பதிலை எழுதுபவர்களுக்கு ஒரு ரீசேட் பரிசாக வழங்கப்படும். இந்தக் கேள்வியின் பதிலில் குறைந்தது 8 சம்பிரதாயங்களை சரியாக எழுதி அனுப்ப வேண்டும்.
கேள்வி : சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் சம்மாந்துறையில் நடந்த கல்யாணங்களில் இருந்த சம்பிரதாயங்கள் ஒன்றுமே இன்று இல்லை. அப்படி அன்றிருந்த சம்பிரதாயங்களில் குறைந்தது மிக முக்கியமான எட்டை (8) குறிப்பிடுக.??
இதற்கான பதிலை உங்கள் பெற்றார், உறவினர்களிடம் விசாரிக்கவும்.
மேலே உள்ள கேள்விக்கான பதில்களை எதிர்வரும் ஜூலை 20ம் திகதிக்கு முன்னர் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கத்துடன், எங்களது இந்த sammanthurai24@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (e-mail) அனுப்பி வைக்க வேண்டும்.
இன் ஷா அல்லாஹ் ஜூலை 23, 24ம் திகதிகளில் சரியான பதில்களுடன் சரியான பதில்களை அனுப்பியவர்களின் பெயர்களையும் இங்கே பிரசுரிப்போம். அதே நேரம் அவர்களை நாங்கள் தொலைபேசியின் மூலமாகத் தொடர்புகொண்டு பரிசை வழங்குவோம்.