தன்னை வளர்த்தவர்கள் கைது செய்யப்பட்டதனால் அவர்களோடு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நாய்.
மத்திய பிரதேசத்தில் வழக்கு ஒன்றில் குடும்பத்தையே கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிக்கு மட்டும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
உயிரிழந்த 5 பேரில் 10 வயது சிறுவனும் ஒருவனாவான். இந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் போலீசார் மனோகர் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டில் மூவரை தவிர அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாயும் இருந்துள்ளது. வீட்டை பூட்டிவிட்டு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். முதலில் போலீசார் வளர்த்தவர்களை அழைத்துச் செல்வதை பார்த்து நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது.
பின்னர் போலீசார் அந்த நாயை கட்டுப்படுத்தினர். மனோகர் வீட்டிற்கு அருகில் இருந்தவர்களிடம் இந்த நாயை பார்த்துக் கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு அனைவரும் மறுத்துள்ளனர்.
எனவே, இந்த பிராணியை பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் போனால் பசியில் இறந்துவிடும் என்பதால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.