(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
நாங்கள் 70 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது வெளிவாரி உள்வாரி என பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
ஆகவே வெளிவாரி பட்டதாரிகளை நிராகரிப்பது எந்த அடிப்படையில் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.