(சுலைமான் றாபி)
நிந்தவூர் பிரதேச கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்வி அதிகாரியாக எம். சரிப்டீன் நேற்றைய தினம் (24) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பேராதெனிய பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான இவர், கடந்த 1998.07.27 ம் திகதி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டார்.
இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த இவர் ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையில் கடந்த 2012.10.01 ம் திகதி முதல் 2016.09.13 ம் திகதி வரை அதிபராகவும், இதன் பின் 2016.09.14 ம் திகதி முதல் 2019.07.23 ம் திகதி வரை நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் நிந்தவூர் பிரதேச கோட்டக் கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திருமதி ஜிஹானா அலீப், அண்மையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றிருந்த நிலையில், அந்த இடத்திற்கு கல்முனை கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். சாஜித், தற்காலிகமாக கோட்டக் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளராக எம். சரிப்டீன் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.