தற்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அமைச்சுப் பதவியொன்றை சம்மாந்துறைக்கு வழங்க முன் வர வேண்டுமென நாபீர் பவுண்டேசனின் ஸ்தாபகர் நாபீர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சிறந்த ஆளுமை மிக்க சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுப்பவர். எனவே அவருக்குரிய அமைச்சு அதிகாரத்தை வழங்க அமைச்சர் ரஊப் ஹக்கீம் முன் வரவேண்டும் எனவும் நாபீர் குறிப்பிட்டார்.