புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவர் மக்காவில் (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை இரவு மரணித்துள்ளார்.
புதிய காத்தான்குடி இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த எச்.எஸ்.நௌபரா (வயது 39) என்பவரே மக்காவில் வபாத்தாகியுள்ளார்.
இவரின் ஜனாசா மக்காவிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும். இவரின் ஜனாசாவை மக்காவில்; நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பெண்ணோடு அவரது உறவிணர்களும் புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ளனர். வபாத்தான பெண் முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சரிப்தீன் அவர்களின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)