கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய மாணவர்களின் சாதனை.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 1 தங்கம் மற்றும் 6 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று குவித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வெற்றிகளை அறுவடை செய்த மாணவர்கள் அனைவருக்கும் சம்மாந்துறை24 இணையத்தளம் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு தேசிய மட்டத்தில் உங்கள் திறமைகளை இன்னும் கூர்மைப்படுத்தி தேசியத்தின் வெற்றியாளர்களாக பிரகாசிக்க பிரார்த்திக்கிறது.