மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
ஹஜ் பயணிகளுக்கு இன்டநெட் வசதியுடனான 1 மில்லியன் சிம்காட்களை இலசமாக வழங்கும் சவுதி அரேபியா.
சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உலகெங்குமிருந்து வரும் பயணிகளுக்கு அவர்கள் தங்கள் உறவுகளோடு உறவாட, தங்களது ஹஜ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவென சவுதி அரேபியா இன்டநெட் வசதியுடனான 1 மில்லியன் சிம் கார்ட்களை இலவசமாக வழங்கி வருகிறது.
ஹஜ் கடமைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு பல நலத்திட்டங்களை செய்து வரும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் முடிக்குறிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் ஆகியோரின் பணிப்புரையில் இத் திட்டம் சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்படுகிறது.