Ads Area

அரசியல் அதிகாரங்களை பெற இனவாதம் மூலதனமாக மாறிவிட்டதென்பதற்கு விக்னேஷ்வரன் விதிவிலக்கல்ல.

பொறியியலாளர் ஷிப்லி பாறுாக்.

பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ. வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ. வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை நேற்றய 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ. வீ. அவர்கள் த.தே.கூ. உடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதார பூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதி அரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுவருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மைமீதி இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த யுத்தகாலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப்பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.

நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச்சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வுசெய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ. வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

த.தே.கூ. அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.

ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம்சார்பாக வேண்டிக்கொள்கின்றேன்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe