ஒவ்வொரு உணவுப் பொருட்களும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும். சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது, சில உணவுகளை சேக வைத்து சாப்பிடுவதால் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும். ஆனால் நாம் உண்ணும் சில உணவுகளை சாப்பிடுவதற்கு என்று நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தயிரை இரவில் எந்த வடிவிலும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி எடுப்பதால், சுவாசக்குழாய்களை பாதித்து, அதனால் சளி, இருமல் போன்ற பிரச்சனையால் அவஸ்தைப்பட வேண்டிவரும்.
ஆப்பிளை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஆப்பிளில் பெக்டின் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் ஏராளமாக உள்ளது. இந்த பெக்டின் செரிமான இயக்கத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
ஆப்பிளை மாலை அல்லது இரவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவில் ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இதனை இரவில் உட்கொள்ளு போது, வயிற்றில் அமிலங்களின் அளவு அதிகரித்து, அதனால் வயிற்று அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
பருப்பு வகைகளை காலையிலேயே உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, எளிதில் உணவுகளை செரிமானமடையச் செய்து, பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் சாப்பிடத் தோன்றும். இதன் விளைவாக உடல் பருமனை அடைய நேரிடும்.
சர்க்கரை நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடலாம். பகலில் நாம் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவோம். இதனால் உடலில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். மேலும் காலையில் இன்சுலின் சர்க்கரைகளை உடைத்தெரியும்.
சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், சர்க்கரை உடலில் கொழுப்புக்களாக தங்கிவிடும். மேலும் சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் இரவு தூக்கத்தை இழக்க வேண்டிவரும்.
வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது என்பது சிறந்தது. ஏனென்றால் வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள நேச்சுரல் ஆன்டாசிட்டுகள், நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்.
வாழைப்பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிட்டால், உடலில் சளி உருவாக்கம் அதிகரித்து, சளி பிடித்துவிடும். மேலும் வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரவில் வெறும் வயிற்றில் வெறும் வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மதிய வேளையில் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடல் வலிமையை அதிகரித்து, ஒருமுகப்படுத்துதலையும் மேம்படுத்தும்.
இறைச்சி செரிமானமாக தாமதமாகும். எனவே இரவில் இறைச்சியை சாப்பிடக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்தால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன், செரிமான மண்டலத்திற்கு மிகுந்த தீங்கை உண்டாக்கும்.
சீஸில் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. சைவ உணவாளிகளுக்கு, இது இறைச்சிக்கு ஓர் சிறந்த மாற்று உணவுப் பொருளாக இருக்கும். சீஸை சரியான அளவில் காலையில் எடுத்து வந்தால், உடல் பருமனடையாமல், வயிற்று உப்புசம் ஏற்படாமல் தடுக்கலாம்.
கோடைக்காலங்களில் வெந்தய கீரை, பசலைக் கீரை, வல்லாரைக் கீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை,மணத்தக்காளி கீரை,கரிசலாங்கண்ணி கீரை,சக்ரவர்த்தி கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உடல் சூட்டை குறைத்து கொள்வதோடு உடலுக்கு தேவையான உட்டச்சத்துக்களையும் பெறமுடியும்.
மழை, பனி காலத்தில் சுக்கான்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, அரைக்கீரை, புதினா, கற்பூரவள்ளியை எடுத்து கொள்ளலாம். இரவு நேரத்தில் கீரை வகைகளை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் கீரைகள் செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் எடுக்கும் என்பதால் இரவில் எடுக்காமல் காலை அல்லது மதிய உணவில் சேர்க்கலாம்.