சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவாக அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சில எம்.பி.க்கள் வித்தியாசமான கோரிக்கையை அரசின் முன் வைப்பது வழக்கம். இம்முறை சிவசேனா கட்சியின் மூத்த தலைரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
”நந்தர்பார் பகுதிக்கு உள்பட்ட கிராமம் ஒன்றுக்கு சென்ற போது, அங்குள்ள பழங்குடியினர் எனக்கு உணவளித்தனர். அது ஆயுர்வேத சிக்கன் என்றும் கூறினர். உடல் உபாதைகளுக்கு அது தீர்வளிக்கும் என்றும் கூறினர்” என்று சஞ்சய் ரவுத் குறிப்பிட்டார்.
ஆயுர்வேத உணவுகளை கொடுத்தால் கோழி ஆயுர்வேத முட்டைகளை தரும் என்றும் சஞ்சய் ரவுத் தனது பேச்சில் கூறினார். சஞ்சய் ரவுத்தின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பலரும் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.