2019 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த கடற்கரைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தங்காலை கடற்கரை 46 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இது கோயம்போக்க, பள்ளிக்குடவ, மேடகேடிய போன்ற பல விரிகுடாக்களை கொண்டுள்ளது. தங்காலை கடற்கரையானது நீச்சலுக்கும் மற்றும் முத்துக்குளித்தலுக்குமான பொதுவான ஒரு இடமாகவும் காணப்படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள 50 சிறந்த கடற்கரைகளின் தரவரிசை தொகுக்க 6,000 க்கும் மேற்பட்டோரிடம் ஒரு வாக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, 2019 ஆம் ஆண்டிற்கான முதல் 50 நீளமான மணல்தரைகளைக் கொண்ட கடற்கரை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இது பிக் 7 டிராவல் (Big 7 Travel) நிறுவனத்தினால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, இது ஒரு வாக்கெடுப்பில் இருந்து 6,105 வாசகர்களை தங்களுக்கு பிடித்த இடங்களைப் பற்றி வினவியது. பின்பு ஆய்வு செய்த தரவுகள், நீலக் கொடி நிலை தரவரிசை மற்றும் அதன் தலையங்கம் குழுவின் கருத்துக்களை ஆதாரங்களாக கொண்டு தரவரிசைப்படத்தப்பட்டுள்ளது.

