Ads Area

பஸ்கள் அதிக வேகமாகப் பயணித்தால் 1955க்கு முறையிட அறிவுறுத்தல்.

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில், 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைபாடு செய்யுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான சட்டமொன்று உள்ளதாகவும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.


பஸ்சாரதிகளின் அதிக வேகம், ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்படுதல் போன்ற காரணிகளால் பல்வேறு விபத்துக்கள் இடம் பெற்று பலர் உயரிழந்த சம்பவங்கள் இங்கு கவனிக்கத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe