மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு என்றும் இல்லாதவாறு மக்கள் அலை அலையாக அணிதிரண்டிருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தி தானே தன் கைப்பட குப்பைகளை அள்ளி துப்புரவு செய்யதமை சமூக வலையத்தளத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.





