மலேரியா எவ்வளவு கொடுமையானது என்பது இன்றைய சந்ததி அறிந்திராத ஒன்று.90’s கிட்ஸ் அல்ல 80's கிட்ஸ் கூட மலேரியாவின் கோரத்தை நேரில் பார்த்ததில்லை. மலேரியா உயிர்கொல்லி, வேகமாக பரவும் மற்றும் அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும். சில பிரதேசங்களில் இருந்து மக்கள் முற்றாக இடம்பெயரவும் மலேரியா காரணமாக இருந்தது.
சுருக்கமாக சொன்னால் இன்றைய டெங்குவை போல் பல நூறு மடங்கு பதிப்பை ஏற்படுத்தவல்லது மலேரியா.
இலங்கை தற்போது மலேரியா அற்ற நாடு எனும் சிறப்பு பெயருடன் இருக்கிறது இதற்கு பல தசாப்த உழைப்பும் வியர்வையும் மிக மிக அதிகமான இரசாயனபாவனையும் தான் காரணம். ஆனால் இன்றைய உண்மைய நிலை என்னவென்றால் இலங்கையில் நோய்க்காரணி இல்லை ஆனால் முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மலேரியாவை பரப்பக்கூடிய நுளம்புகளின் பெருக்கம் மிக அதிகமாக உள்ளது அவற்றை அழிப்பது என்பது இன்றைய நிலையில் சார்த்தியமற்றது.
மலேரியா நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் தொற்றுடன் ஒருவர் இங்கு வந்து அவருக்கு மலேரியா நோயை பரப்பக்கூடிய ஆற்றலைக்கொண்ட நுளம்புகள் கடித்தால் அதன் பின் மலேரியா நோய் பரவுவதை இலகுவில் தடுக்கமுடியாது. இலகுவில் விளங்கக்கூடிய வகையில் சொன்னால் இங்க பஞ்சு இருக்கு நெருப்பு இல்ல நெருப்பு பத்தி புடிச்சா செய்யிறதுக்கு ஒன்றும் இல்லை.
சரி மட்டக்களப்பில் என்ன நடந்தது???
இந்தியாவில் சில காலம் தங்கியிருந்த ஒருவர் தற்போது ஓர் தமிழ் கிராமம் ஒன்றில் மலேரியா நோயாளியாக அடையாளம் கானப்பட்டுள்ளார். கற்போது மலேரியா தடுப்பு இயக்கம் மிக வேகமாக செயற்பட்டு அவரது கிராமசூழலில் மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்தும் வேலையிலும் அயலவர்களையும் சோதித்தறியும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது ஆனால் இன்னும் அவர் மூலமாக யாருக்காவது பரவி இருக்குமோ என்ற அச்சம் முற்றாக நீங்கவில்லை. குறித்த கிராம மக்கள் இந்த நடவடிக்கைகலை நேரில் பார்த்திருக்கலாம். அனாவசிய குழப்பங்களை தவிர்க்க அந்தக்கிராமத்தின் பெயரை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்.
பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன???
மட்டக்களப்பு -0652222931
கல்முனை- 0672220206
அம்பாரை- 0632223464
அதேபோல் இந்தியாவில் இருந்து சிலவருடங்களுக்குள் நாடு திரும்பியவர்கள் என்றால் அல்லது அடிக்கடி காய்ச்சல் ஏற்படுமானால் மேற்குறிப்பிட்ட இலக்கங்களுக்கு தொடர்பு கொன்டு இலவச இரத்த பரிசோதனையை மேற்கொள்லலாம்.
வீடியோ - https://www.facebook.com/lankahealthtamilweb/videos/1087179814820739/?t=6
வீடியோ - https://www.facebook.com/lankahealthtamilweb/videos/1087179814820739/?t=6
Dr S.Lavapirathan
MO Vector Control
Regional Malaria Office
Ampara