Ads Area

விபத்தொன்றில் தீக்கிரையாக்கப்பட்டு அவதியுறும் சம்மாந்துறை அமீர்தீனின் சிகிச்சைக்கு உதவுங்கள்.

அவரது புகைப்படம் மற்றும் தகவல்கள் அவரது அனுமதியோடே பதிவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர்த்தீன் என்ற சகோதரர் சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்த்தம் சென்று வேலை செய்து கொண்டிருக்கும் போது வேலைத்தளதில் இடம் பெற்ற திடீர் மின்சார விபத்தின் காரணமாக அவரது உடலின் சில பாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதனால் சவுதி அரேபியாவில் உள்ள வைத்தியசாலையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று அவர் வேலை செய்த நிறுவனத்திடம் இருந்து எந்த வித உதவியும் வழங்கப்படாது நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

மிகவும் வறிய நிலையில் உள்ள அமீர்த்தீனின் கை மற்றும் முகம் தீக்கிரையாக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதனால் தனது கைகளை அசைத்து வேலைகள் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றார்.

இவரது கை-மற்றும் முகம் போன்றவற்றின் ஆரம்பகட்ட சிகிச்சைக்காக 6 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுவதாக கண்டியில் உள்ள வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளதனால் அதற்கான நிதியினை பெற்றுக் கொள்ள தனவந்தர்கள், சமூக சேவை அமைப்பினர் மற்றும் பொதுமக்களினது உதவியினை கோரியுள்ளார்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை மற்றும் அவரது பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இவரது நிலையினை உறுதிப்படுத்தி நிதி திரட்டுவதற்கான அனுமதிக் கடிதங்களையும் வழங்கியுள்ளனர்.

சகோதரர் அமீர்தீனின் தொலைபேசி - 0771346472 மற்றும் IMO இலக்கம் - 0770219406









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe