(எம்.ஆர்.எம்.வஸீம்)
சுற்றுலா அமைச்சினால் 48 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தில் ஒரு முஸ்லிம் நாடுகூட இல்லை. இது அரபு நாடுகளை வெறுப்பூட்டும் நடவடிக்கையாகும்.
ஆனால் எமது நாட்டுக்கு அரபு நாடுகளே அனை த்து சந்தர்ப்பங்களிலும் உதவி வந்திருக்கின்றன. அதனால் அரசாங்கம் இந்த பிழையை திருத்திக்கொள்ளவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
சுற்றுலா அமைச்சினால் 48 நாடுகளுக்கு 6மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்தில் முஸ் லிம் நாடுகள் உள்வாங்கப்படாமல் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொட ர்ந்து தெரிவிக்கையில்,
அத்துடன் சுற்றுலாத்துறை அமை ச்சினால் பெயரிடப்பட்டிருக்கும் 48 நாடுகளும் எமது நாட்டை சூறையாட திட்டமிட்டவைக ளும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கைப்பற்றிக்கொள்வதற்காக உதவி செய்த நாடுகளாகும். ஆனால் அரபு நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் கல்விக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரியளவில் உதவி செய்திருக்கின்றன. அந்த நாடுகள் ஒன்றின்கூட பெயர் இடம்பெறாமல் இருப்பது, அரபு நாடு களை விரக்திக்குள்ளாக்கும் செய லாகும். குறிப்பாக சவூதி அரேபியா நாட்டின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக 4ஆயிரத்து 800 மில்லியன் டொலர்களை இல ங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வழங்கி இருக்கின்றது. அதேபோன்று குவைத் அரசாங்கம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்காக 800 மில்லியன்களை வழங்கியுள்ளது. டுபாய் அரசாங்கம் ஆயிரம் டொலர் மில்லியனுக்கும் அதிகம் நாட்டுக்கு உதவிசெய்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் அரபு நாடுகளை புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

