Ads Area

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார..??

இலங்கையில் 2020 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் படு மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.

இலங்கையின் அடுத்த அரசதலைவராக யார் வருவார் என நாட்டுமக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச கோட்டபாயவை தமது கட்சியின் வேட்பாளராக நேற்றையதினம் அறிவித்திருந்தனர். இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தன.

குறிப்பாக குமார் சங்கக்கார அனைத்து இன மக்களும் விரும்புகின்ற ஒரு விளையாட்டு வீரராக விளங்குவதால் , ஜனாதிபதி வேட்பாளராக குமார் சங்கக்கார கள்மிறங்கினால் நாட்டிற்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்குமென பரவலாக பேசப்பட்டிருந்தது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe