Ads Area

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சி

பௌத்த போதனைகள் பாளி மொழியிலும், இந்து போதனைகள் சமஸ்கிருத மொழியிலும் இருப்பதைப் போன்று இஸ்லாம் மதத்தின் இறைவாக்கியமான புனித குர்ஆன் அரபு மொழியிலேயே உள்ளது. ஐவேளை தொழுகையை அரபிமொழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் உரையாற்றியதாவது: 

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். 

முறையாக பல்கலைக்க அனுமதியைப் பெற்று ஆவணத்தைச் சமர்ப்பித்த பின்னரும் அந்தப் பல்கலைக்கழகத்தை ஒரு சமூகத்துக்கு எதிராக பழிதீர்க்கும் விடயமாகப் பயன்படுத்துகின்றனர். இது நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும். ஏற்றுமதி, இறக்குமதியில் வெளிநாடுகளின் மூலப்பொருட்களில் தங்கியிருக்கின்றோம். ஏற்றுமதியை ஊக்குவிக்க நேரடி பங்களிப்புச் செய்யும் அரபு நாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் தவறான கருத்துக்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe