கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக எம்.ஐ. ஜாபீர், இன்று (09) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான ஜாபீரிற்கான நியமனக் கடிதத்தினை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். சலாஹுதீனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் முயற்சியினால் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிபாரிசுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனம் தொடர்பிலான முயற்சிகளை முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீசுடன் இணைந்து கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் றிப்தி முஹம்மட்டும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஊடகப் பிரிவு -

